IPL 2024: இது திருப்பி கொடுக்கும் நேரம்; கேகேஆர் அணியின் வழிகாட்டி கவுதம் காம்பிர் நெகிழ்ச்சி
ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாகத் திரும்பியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், கேகேஆர் அணி தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு நேர்காணலில், வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் அவர் கேகேஆர் அணிக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துளளார். 42 வயதான அவர் இரண்டு முறை அணியின் கேப்டனாக இருந்து அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும், கேகேஆர் அணி இதுவரை இரண்டு பட்டங்களை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்பை திருப்பி கொடுக்க விரும்புவதாக கூறிய கவுதம் காம்பிர்
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியபோது, வங்காள மக்களிடமிருந்து பெற்ற அனைத்து அன்பையும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகக் கூறினார். தனது நேர்காணலில், "நிறைய உணர்ச்சிகள், வியர்வை, கடின உழைப்பு, அந்த நினைவுகள் எல்லாம் இருந்த இடத்திற்கு திரும்பிச் செல்வது உணர்வுபூர்வமாக உள்ளது. இது ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையுடன், அணிக்கு சிறந்ததை வழங்க முடியும். கேகேஆர் எங்கள் அன்பின் அளவு காரணமாக என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. வங்காள மக்களிடமிருந்து, அதை திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் இது." என்று காம்பிர் கூறினார். முன்னதாக, காம்பிர் இரண்டு ஆண்டுகள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வழிகாட்டியாக பணியாற்றினார். அப்போது லக்னோ இரண்டு சீசன்களிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.