டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.
அவரது ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்கள், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.
இந்த ஆட்டத்தின் மூலம், திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் ஆனார்.
மேலும், இதன் மூலம், நியூசிலாந்தின் மார்க் சாப்மேனின் முந்தைய சாதனையான 271 ரன்களை முறியடித்தார்.
டாப் 5 வீரர்கள்
டி20 கிரிக்கெட்டில் அவுட்டாகாமல் அதிக ரன் சேர்த்த டாப் 5 வீரர்கள்
திலக் வர்மா இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் 107*, 120* மற்றும் 19* ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த பட்டியலில், தலா 240 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அவர்களைத் தொடரந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 239 ரன்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால், 20வது ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலக்கை எட்டி வென்றது.
இதன் மூலம் தொடரில் தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது.