
வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்; 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தென்னாபிரிக்காவின் டெம்பா பவுமா
செய்தி முன்னோட்டம்
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றி 27 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், கேப்டன் டெம்பா பவுமா ஒரு நூற்றாண்டு பழமையான டெஸ்ட் கிரிக்கெட் சாதனையையும் முறியடிக்க வழிவகுத்துள்ளது.
ஐடன் மார்க்ராமின் (136) அற்புதமான சதம் மற்றும் பவுமாவின் முக்கியமான 66 ரன்கள் மூலம் லார்ட்ஸில் 282 ரன்கள் இலக்கை எட்டியது.
மேலும், ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையையும் வென்றது.
இந்த வெற்றி மகத்தானது என்றாலும், பவுமாவின் கேப்டன்சி சாதனையும் சமமான கவனத்தை ஈர்த்தது.
சாதனை
முந்தைய சாதனை
1902-1921 க்கு இடையில் ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் 8 வெற்றிகள், 2 டிராக்கள் என டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தோல்வி கூட இல்லாமல் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த்திருந்தார்.
இந்நிலையில், டெம்பா பவுமா இப்போது 2023 முதல் 2025 வரை 9 வெற்றிகள் மற்றும் 1 டிரா என அதிக வெற்றிகளுடன் தோல்வியைப் பெறாத கேப்டன் என்ற 104 ஆண்டுகால மைல்கல்லை முறியடித்துள்ளார்.
இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவிற்கு ஐசிசி பெருமையைக் கொண்டு வந்த ஒரு தலைவராக மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனாக பவுமாவின் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறது.
இதற்கிடையே, இந்த பட்டியலில் இந்தியாவின் அஜிங்க்யா ரஹானே 4 வெற்றி மற்றும் 2 டிராக்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.