LOADING...
டி20 உலகக்கோப்பை 2026 நேரலை எதில் பார்க்கலாம்? தமிழ் வர்ணனை உண்டா? முழு விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை 2026க்கான ஒளிபரப்பு உரிமம் மற்றும் சேனல் விவரங்களை அறிவித்தது ஐசிசி

டி20 உலகக்கோப்பை 2026 நேரலை எதில் பார்க்கலாம்? தமிழ் வர்ணனை உண்டா? முழு விவரம் இதோ!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
03:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் இலங்கை கூட்டாக நடத்தும் 10 வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமம் மற்றும் சேனல் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது வெளியிட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரின் அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த மொழிகளில் கண்டு ரசிக்கலாம்.

நேரலை

இந்தியாவில் நேரலை எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோஸ்டார் நிறுவனம் நேரலை வசதிகளை வழங்குகிறது. தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் அனைத்து போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும். டிஜிட்டல்: ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்.

வர்ணனை

தமிழ் வர்ணனை மற்றும் பிற மொழிகள்

இந்த முறை ரசிகர்களுக்காகப் பல்வேறு மொழிகளில் வர்ணனை (Commentary) வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் நேரலை கிடைக்கும். இது தவிர, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வங்காளம், போஜ்புரி மற்றும் ஹரியான்வி ஆகிய வட்டார மொழிகளிலும் சிறப்பு ஒளிபரப்பு இருக்கும். இந்திய அணி விளையாடும் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மராத்தி மற்றும் இந்திய சைகை மொழி (Sign Language) வசதிகளும் வழங்கப்பட உள்ளன.

Advertisement

சிறப்பு வசதிகள்

மொபைல் ரசிகர்களுக்கான சிறப்பு வசதிகள்

ஜியோஹாட்ஸ்டார் தளம் மொபைலில் பார்ப்பவர்களுக்காகப் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது: Vertical Feed: மொபைலைத் திருப்பாமல் நேராக வைத்துப் பார்க்கும் வசதி (ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்). Multi-cam Feature: ஸ்டம்ப் கேமரா, பீல்டு வியூ எனப் பல்வேறு கோணங்களில் போட்டியை நீங்களே தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 360 Degree View: மைதானத்தின் முழுமையான காட்சியை 360 டிகிரியில் ரசிக்கலாம்.

Advertisement

உலக நாடுகள்

உலக நாடுகளுக்கான ஒளிபரப்பாளர்கள் பட்டியல்

இலங்கையில் டயலாக் டிவி, திபாப்பரே, பாகிஸ்தானில் பிடிவி, மைகோ, தமாஷா, ஆஸ்திரேலியாவில் பிரைம் வீடியோ, இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ், நவ், அமெரிக்கா & கனடாவில் வில்லோ டிவி, தென்னாப்பிரிக்காவின் சூப்பர் ஸ்போர்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும். தொடக்க நாளான பிப்ரவரி 7 ஆம் தேதி மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினமே மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement