பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்திய அணியின் ஐந்தாம் இடத்தில் களமிறங்கும் வீரர் யார்?
வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி முன்னணி வீரர்கள் இல்லாததால் சிலர் இல்லாததால், அதற்கு மாற்றாக களமிறக்க வேண்டிய வீரர்க குறித்த சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினால், ஐந்தாவது இடம் சூர்யகுமார் யாதவ் அல்லது ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்கும். சூர்யகுமார் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. ஆனால், கில் தனது பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார். இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், லோயர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சுழலைச் சிறப்பாகச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
ஐந்தாம் இடத்தில் சூர்யகுமார் vs கில்
கில் முதல்தர கிரிக்கெட்டில் 40 ஆட்டங்களில் 3,278 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒன்பது சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும். 268 அவரது அதிகபட்ச ஸ்கோராகும். அதே சமயம் டெஸ்டில் 13 ஆட்டங்களில் 736 ரன்களைக் குவித்ததுள்ளார். இதில் நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்துள்ள சூர்யகுமார், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலிக்க விரும்புகிறார். 32 வயதான அவர் 2010 இல் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் 79 போட்டிகளில் 5,549 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் அடங்கும். இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால், மிடில் ஆர்டரில் ஷுப்மன் கில் ஆடியதில்லை என்பதால், சூர்யகுமார் தான் பொருத்தமான தேர்வாக பார்க்கப்படுகிறது.