
IND vs AUS நான்காவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியின் நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில் தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் அவசரமாக நாடு திரும்பினார்.
இதையடுத்து இந்தூரில் நடந்த மூன்றாவது போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தாயின் உடல்நிலை இன்னும் குணமடையாததால், அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தே கேப்டனாக தொடர்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமனம்
🔺 Steve Smith will lead the Test side in Ahmedabad. Pat Cummins will remain in Sydney, Australia, due to his mother’s illness.#INDvAUS
— Doordarshan Sports (@ddsportschannel) March 6, 2023