NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்
    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்
    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 14, 2023, 12:17 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

    பேட் கம்மின்ஸ் ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியா திரும்ப மாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார். பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்டுகளில் ஸ்மித் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்தினார். இதில் இந்தியா 2-1 என தொடரை வென்றது. தனது தாய் மரியாவை கவனித்துக்கொள்வதற்காக கம்மின்ஸ் டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சுற்றுப்பயணத்தை விட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கம்மின்ஸின் தாய் காலமானார். அவர் இன்னும் சில காலம் குடும்பத்துடன் இருக்க வேண்டி உள்ளதால் ஒருநாள் தொடருக்காக இந்தியா வரமாட்டார் என பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.

    இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் முழு விபரம்

    தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக ஜே ரிச்சர்ட்சன் விலகியதை அடுத்து நாதன் எல்லிஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி டெஸ்டில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத டேவிட் வார்னர் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேட்ச்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்
    'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஐபிஎல் 2023
    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட் செய்திகள்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா

    ஒருநாள் கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் உலகக்கோப்பை
    மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்! விராட் கோலி
    ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை! ஐபிஎல்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023