LOADING...
டி20 கிரிக்கெட்டில் புதிய சகாப்தம்! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் புதிய சகாப்தம்! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

எழுதியவர் Vasuki
Jun 06, 2026
03:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டி20 கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், அதிரடியான பல மாற்றங்களுடன் கூடிய புதிய இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்று தந்த சில மாதங்களிலேயே சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இந்த புதிய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கேப்டன்

ஸ்ரேயாஸ் ஐயர் கையில் கேப்டன் பொறுப்பு!

கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு தற்போது முதன்முறையாக டி20 அணிக்குத் திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், நேரடியாகக் கேப்டனாக அரியணை ஏறியுள்ளார். அணியின் துணை கேப்டனாக இளம் அதிரடி ஆட்டக்காரர் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி குறித்துப் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், "ஐபிஎல் தொடர்களில் வெவ்வேறு அணிகளை (2024-ல் கேகேஆர் சாம்பியன், 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் ரன்னர்) அவர் வழிநடத்திய திறமையை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய சூழலில் டி20 அணியை வழிநடத்த அவரே மிகச்சிறந்த தகுதியான நபர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர், 55.23 சராசரியுடன் 498 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

ஐபிஎல் 2026-ன் நாயகன்

சாதனைப் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு மகுடம்

இந்த அணித் தேர்வில் ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பது 15 வயதே ஆன இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியின் வருகைதான். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் தனது அசாத்திய பேட்டிங்கால் மிரட்டிய சூர்யவன்ஷி, 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்றதோடு, வளர்ந்து வரும் வீரர் மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் (MVP) ஆகிய விருதுகளையும் அள்ளினார். இந்த ஒரே சீசனில் 237.31 என்ற அசாத்திய ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தார். இவரது இந்த அசாத்திய வெறித்தனமான ஃபார்ம் காரணமாகவே ரிங்கு சிங்கிற்குப் பதிலாக இவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஜஸ்பிரித் பும்ரா ஒய்வு

அணியில் மற்ற முக்கிய மாற்றங்கள்

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆல்-ரவுண்டர் ஹர்ஷித் ராணா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ராவிற்கு இந்த இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) உடற்தகுதி மறுவாழ்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவிற்குப் பதிலாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்திய அணி

அயர்லாந்து & இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.

 இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி.

Advertisement