
ஐபிஎல் 2025 தொடக்கவிழாவில் நடிகர் சூர்யாவின் ஆயுத எழுத்து பட பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 2025 தொடக்க விழா ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குரலால் ரசிகர்களை முழுமையாக கவர்ந்திழுத்தார்.
பல மொழிகளில் பாடல்களை பாடிய அவர், மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படமான ஆயுத எழுத்து படத்தில் வரும் ஜன கண மன என்ற தமிழ்ப் பாடலை அவர் பாடியது தமிழ் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பார்வையாளர்களை வரவேற்று விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வந்தே மாதரம்
ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரத்துடன் முடிப்பு
13 மொழிகளில் பாடுவதற்குப் பெயர் பெற்ற ஷ்ரேயா கோஷல், பத்மாவத் படத்தின் கூமர் பாடலுடன் கூட்டத்தைக் கவர்ந்தார்.
பின்னர் ஜன கண மன பாடலுடன் தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். பின்னர் பல்வேறு மொழிகளில் பாடிய அவர், இறுதியில் ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலுடன் முடித்தார்.
வந்தே மாதரம் பாடும்போது முழு அரங்கமும் எழுந்து நின்று பாடத் தொடங்கியது. அவரது இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நடிகை திஷா பதானி ஒரு அற்புதமான நடனத்துடன் மேடைக்கு வந்தார்.
பின்னர் ஷாருக்கான் விராட் கோலி மற்றும் ரின்கு சிங்கை தன்னுடன் நடனமாட அழைத்தபோது உற்சாகம் உச்சத்தை எட்டியது, இது ரசிகர்களை மகிழ்வித்தது.
இறுதியில் ஐபிஎல் கோப்பையை வெளியிடுவதோடு தொடக்க விழா முடிவடைந்தது.