Page Loader
ஐபிஎல் 2023 : காயத்திலிருந்து குணமடைந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குத் திரும்பினார்
காயத்திலிருந்து குணமடைந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குத் திரும்பினார்

ஐபிஎல் 2023 : காயத்திலிருந்து குணமடைந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குத் திரும்பினார்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 28, 2023
08:26 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) நடந்து வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் 8வது ஆட்டத்தில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தத் திரும்பியுள்ளார். அவர் கடந்த 15 நாட்களாக காயம் காரணமாக விளையாடவில்லை. முன்னதாக, ஏப்ரல் 13 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2023 இல் தவான் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை. பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2023 இல் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

shikar dhawan speaks about injury

அணிக்குத் திரும்புவது குறித்து டாஸின் போது பேசிய ஷிகர் தவான்

டாஸ் போடும்போது பேசிய ஷிகர் தவான், "தோள்பட்டை இப்போது வலியின்றி மிகவும் சிறப்பாக உள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அணி சரியான மனநிலையில் உள்ளது. சீசனின் 2வது பாதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்." என்று கூறினார். நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 233 ரன்களை அடித்த ஷிகர் தவான், 3 போட்டிகளில் தவறவிட்டாலும், அதிக ரன் குவித்தவர்களில் முதல் 15 இடங்களில் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், மயங்க் அகர்வாலை அணி இந்த சீசனுக்கு முன்னதாக நீக்கிய பிறகு, சீசனின் தொடக்கத்தில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.