LOADING...
CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்; ஜெர்சி நம்பர் இதனாம்!
CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்

CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்; ஜெர்சி நம்பர் இதனாம்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
06:23 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன். இதனை ஒரு வரவேற்பு வீடியோ மூலம் அறிவித்தது CSK அணி. அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர் குழுவினர். அதில் மலையாள திரையுலகின் இளம் நாயகன் பசில் ஜோசப்பும் இடம் பெற்றுள்ளார். மேலும் அந்த வீடியோவில் சஞ்சு சாம்சனின் ஜெர்சி நம்பரும் வெளியிட்டுள்ளனர். அது 11 ஆகும். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து கேப்டன் சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் சிஎஸ்கே பெற்றது. எனினும் இவர் தற்போது CSK அணியின் கேப்டனாக இருக்க மாட்டார். மாறாக ருதுராஜ் தான் தலைவராக தொடர்வார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா வர்த்தகம்

இந்த வர்த்தகத்தின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கியுள்ளது. இந்த வர்த்தகம் குறித்துச் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில், "பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் அச்சாணியாக இருந்த ஜடேஜா மற்றும் சாம் கரணை வர்த்தகம் செய்வது அணியின் வரலாற்றிலேயே நாங்கள் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். இது இரு வீரர்களுடனான பரஸ்பரப் புரிதலுடன் எடுக்கப்பட்டது" என்று வருத்தம் தெரிவித்தார். சஞ்சு சாம்சனின் திறமையும், சாதனைகளும் அணியின் இலக்குகளை நிறைவு செய்வதாகக் கூறிய அவர், "இந்த முடிவானது மிகுந்த சிந்தனையுடனும், மரியாதையுடனும், நீண்ட கால நோக்குடனும் எடுக்கப்பட்டுள்ளது." என்றும் தெரிவித்தார்.