அடுத்த செய்திக் கட்டுரை

" என் தட்டில் என்ன இருக்குனு சொல்லுங்க?" : ஹோலி வாழ்த்துக்களுடன் சச்சின் வெளியிட்ட ட்வீட்
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 07, 2023
07:10 pm
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ஹோலி கொண்டாட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வண்ணமயமான ஹோலி பண்டிகையை இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் முழு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சில மாநிலங்கள் ஏற்கனவே கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ள நிலையில், மற்றவை நாளை கொண்டாட உள்ளன.
தனது ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்! என் தட்டில் என்ன இருக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா?" என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன், அவர் ஹோலி கொண்டாட்டத்தில் பல்வேறு வண்ணங்கள் தெளிக்கப்பட்ட வெள்ளை குர்தா அணிந்திருக்கும் படத்தையும் வெளியிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
சச்சின் ட்வீட்
Happy Holi everyone!
— Sachin Tendulkar (@sachin_rt) March 7, 2023
Can you guess what's on my plate? 🍽️ pic.twitter.com/dV1UxVcc9M