
மும்பையில் விளம்பர நிகழ்ச்சியில் தீப்பிடித்து எரிந்த ஸ்போர்ட்ஸ் கார் : வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) மும்பையில் நடந்த விளம்பர நிகழ்ச்சியின் போது சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கருப்பு நிற நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார் தீப்பிடித்தது.
பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் அருகே நடைபெற்ற ரெட்புல் எஃப்1 ஷோ ரன்னில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீப்பிடித்த வாகனத்தின் காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், தீ விரைவில் அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும், இப்படியொரு சம்பவம் நடந்த நிலையில், மும்பை மாநகராட்சியின் பேரிடர் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
நிசான் ஜிடிஆர் தீப்பிடித்து எரியும் வீடியோ
A Nissan GTR caught on fire after the #redbullshowrunmumbai pic.twitter.com/wsQAwBsZF5
— sagar (@sagarchangwani) March 12, 2023