Page Loader
ஆஸ்திரேலிய ஓபன்: கிராண்ட்ஸ்லாம் வென்ற வயது மிகுந்தவர் என்ற பெயரை பெற்றார்  போபண்ணா 

ஆஸ்திரேலிய ஓபன்: கிராண்ட்ஸ்லாம் வென்ற வயது மிகுந்தவர் என்ற பெயரை பெற்றார்  போபண்ணா 

எழுதியவர் Sindhuja SM
Jan 27, 2024
07:22 pm

செய்தி முன்னோட்டம்

2024 ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் வரலாறு படைத்துள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த இந்த ஜோடி 7-6(0), 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சிமோன் பொலேலி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஜோடியை வீழ்த்தியது. ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 2017ல் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோலண்ட் கரோஸ் பட்டத்தை அவர் வென்றறிருக்கிறார் என்பதால், ஒட்டுமொத்தமாக இது அவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 43 வயதில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம், ஓபன் சகாப்தத்தில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வயது மிகுந்தவர் என்ற பெயரும் போபண்ணா வுக்கு கிடைத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

போபண்ணா இணை சாம்பியன்