சவூதி புரோ லீக்கிற்கு இடம் பெயர்ந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் வீரர்
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வந்த கால்பந்து வீரர் ரியாத் மஹ்ரேஸ் தற்போது சவூதி புரோ லீக்கின் அல் அஹ்லி அணிக்கு இடம் பெயர்த்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி வெள்ளிக்கிழமை (ஜூலை 28) இந்த இடமாறுதலை உறுதிப்படுத்தியுள்ளது. 32 வயதான மஹ்ரேஸ், இந்திய மதிப்பில் சுமார் ரூ.270 கோடிக்கு நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் அல் அஹ்லியில் இணைகிறார். முன்னதாக, 2018 இல் லீசெஸ்டர் சிட்டியில் இருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு இடம் பெயர்ந்த ரியாத், கடந்த சீசனில் கான்டினென்டல் ட்ரெபிள் வென்றார். இடமாறுதல் அறிவிப்பிற்கு பிறகு, மான்செஸ்டர் சிட்டி அணியில் தான் இருந்த காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள ரியாத், சக வீரர்கள், ரசிகர்கள் என தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.