LOADING...
ரூ.27 கோடிக்கு வொர்த் இல்ல! ரிஷப் பண்டின் தொடர் பேட்டிங் சொதப்பலால் கொந்தளிக்கும் எல்எஸ்ஜி ரசிகர்கள்
ரிஷப் பண்டின் தொடர் பேட்டிங் சொதப்பலால் கொந்தளிக்கும் எல்எஸ்ஜி ரசிகர்கள்

ரூ.27 கோடிக்கு வொர்த் இல்ல! ரிஷப் பண்டின் தொடர் பேட்டிங் சொதப்பலால் கொந்தளிக்கும் எல்எஸ்ஜி ரசிகர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 12, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டத்தில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3வது வீரராகக் களம் இறங்கிய பண்ட், 11 பந்துகளில் 18 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்த போது, முகமது சிராஜ் பந்துவீச்சில் ஒரு தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆட்டத்தின் போக்கை உணர்ந்து நிதானமாக ஆட வேண்டிய கேப்டனே பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது லக்னோ ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சிராஜ் விரித்த வலை

சிராஜ் விரித்த வலையில் சிக்கிய 27 கோடி ரூபாய் நாயகன்

ரிஷப் பண்ட் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் அதிரடியாக ஆடினார். ககிசோ ரபாடா வீசிய பந்தை வெளியே வந்து பவுண்டரிக்கு விரட்டிய அவர், ஒரு பிரம்மாண்ட சிக்ஸரையும் விளாசினார். ஐடன் மார்க்ரமுடன் இணைந்து 31 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது சிராஜ் வீசிய 5-வது ஓவரில் லெந்த் சரியாக இல்லாத பந்தை தூக்கி அடிக்க முயன்றார். பந்து பேட்டில் சரியாகப் படாததால், கவர் திசையில் நின்றிருந்த ராகுல் திவேதியாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4.1 ஓவர்களில் லக்னோ அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற இது முக்கியக் காரணமாக அமைந்தது.

எகிறும் விமர்சனங்கள்

விலைக்கேற்ற ஆட்டம் எங்கே?

கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச விலையான 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் ரிஷப் பண்ட். இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஒரு வீரர், அணியின் கேப்டனாக இருந்து கொண்டு இவ்வளவு மோசமான ஷாட் ஆடி அவுட்டாவதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "27 கோடிக்கு இன்னும் அவர் நியாயம் செய்யவில்லை" என்றும், "ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இவர் ஒரு சுமாரான பேட்ஸ்மேன்" என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisement

ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026ல் ரிஷப் பண்ட்டின் ஏற்ற இறக்கமான ஃபார்ம்

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டின் ஆட்டம் ஒரு சீராக இல்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 34.33 ஆக இருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் விக்கெட்டைப் பறிகொடுக்கும் விதம் கவலையளிப்பதாக உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக 68 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தாலும், மற்ற போட்டிகளில் 7, 10, 18 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். தொடக்கத்தை நல்ல ஸ்கோராக மாற்றத் தவறுவது பண்ட்டிற்குப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

Advertisement

அடுத்த போட்டி

பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த சவாலும் எதிர்பார்ப்பும்

குஜராத் அணிக்கு எதிரான இந்தச் சொதப்பல் ஆட்டத்திற்குப் பிறகு, ஏப்ரல் 15 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரஜத் பாட்டிதர் தலைமையிலான ஆர்சிபி அணியைச் சந்திக்கும் போது, பண்ட் தனது பொறுப்பற்ற ஆட்டத்தைக் கைவிட்டு, ஒரு கேப்டனாக முன்னின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதே லக்னோ ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். பண்ட் தனது 27 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏற்றவாறு ஆடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement