LOADING...
ஈ சாலா கப் நம்தே 2.0! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆட்டோ பயணம் இலவசம்; வைரலாகும் பெங்களூரு ஆட்டோ டிரைவர்
ஆர்சிபி ஜெர்சி அணிந்தால் இலவச ஆட்டோ பயணம்

ஈ சாலா கப் நம்தே 2.0! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆட்டோ பயணம் இலவசம்; வைரலாகும் பெங்களூரு ஆட்டோ டிரைவர்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2026
05:49 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28, 2026) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதும் இந்த முதல் போட்டியை முன்னிட்டு பெங்களூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தச் சூழலில், ஆர்சிபி அணி மீது தான் வைத்துள்ள அதீத அன்பை வெளிப்படுத்தும் வகையில் பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள செயல் இணையத்தில் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது.

இலவசம்

ஈ சாலா கப் நம்தே 2.0 - இலவசப் பயணம்

அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் பின்புறம் ஒரு கையால் எழுதப்பட்ட அறிவிப்பை ஒட்டியுள்ளார். அதில், "இன்று ஆர்சிபி vs எஸ்ஆர்ஹெச் போட்டி. நீங்கள் ஆர்சிபி ஜெர்சி அணிந்திருந்தால் பயணம் முற்றிலும் இலவசம். ஈ சாலா கப் நம்தே 2.0 (இந்த முறையும் கோப்பை நமதே). ஆர்சிபி என்றென்றும்." என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற உற்சாகத்தில் இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள், இந்த ஆட்டோ டிரைவரின் செயலைக் கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

பலப்பரீட்சை

நடப்புச் சாம்பியன் vs ரன்னர்-அப்

ஐபிஎல் 2026 இன் முதல் போட்டியே கடந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் மோதிய ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையே நடைபெறுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய ஆட்டம் ரன் மழையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தங்களது வேகப்பந்து வீச்சு பலவீனமாக உள்ள நிலையில், பேட்டிங்கையே பெரிதும் நம்பியுள்ளன.

Advertisement

சவால்கள்

முக்கிய வீரர்கள் விலகலும் சவால்களும்

ஆர்சிபி அணி இம்முறை தனது நட்சத்திரப் பந்துவீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் யாஷ் தயால் ஆகியோரின் சேவையின்றி களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு கோப்பை வெல்ல இவர்கள் இருவரும் முக்கியக் காரணமாக இருந்தனர். மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்னும் அணியுடன் இணையாததால், அந்த அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இரு அணிகளிலும் உள்ள அதிரடி பேட்டர்கள் இந்த இடைவெளியை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி 

விராட் கோலியின் வருகை

அனைத்து ரசிகர்களின் பார்வையும் 'கிங்' விராட் கோலி மீதே உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஒரு ஃபார்மட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் கோலி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் களத்திற்குத் திரும்புகிறார். கடந்த 2025 சீசனின் இறுதியில் அவர் காட்டிய அதிரடி ஆட்டத்தை இம்முறையும் தொடர்ந்தால், ஆர்சிபி அணி மீண்டும் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. பெங்களூர் ரசிகர்கள் மைதானத்தை 'ரெட் அண்ட் கோல்ட்' நிறத்தில் நிரப்பத் தயாராகிவிட்டனர்.

Advertisement