700 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை கடந்த அஸ்வின்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டினார். இதன் மூலம் உலக அளவில் 700 விக்கெட்டுகளை எடுத்த 10வது வீரர் மற்றும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கிடையே, அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 95வது முறையாக, போல்ட் மூலம் எதிரணி வீரரின் விக்கெட்டை எடுத்து அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார். போல்டு மூலம் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்களில், இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 94 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 95 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
அதிக முறை இன்னிங்ஸின் முதல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை
இன்னிங்ஸின் முதல் விக்கெட்டை அதிகமுறை கைப்பற்றியவர்களில் சுழல் ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன் (43), ஷான் வார்னேவை (34) விட இந்திய வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். அஸ்வின் ரவிச்சந்திரன், வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், முதல் விக்கெட்டாக, சந்தர்பாலை அவுட் ஆக்கியதன் மூலம் 53வது முறையாக இந்த சாதனையை செய்துள்ளார். அஸ்வினுக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 49 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், கிரிக்கெட்டின் கடவும் சச்சின் டெண்டுல்கர், அஸ்வின் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டி, ட்வீட் வெளியிட்டுள்ளார்.