INDvsNZ 2வது டெஸ்ட்: முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
புனேயில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். முன்னதாக, வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், ஆஃப் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் 259 ரன்களுக்கு முதல் நாளிலேயே ஆட்டமிழந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எல்பிடபிள்யூ
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாம் லாதமை அவுட்டாக்கியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்பிடபிள்யூ முறையில் 116வது விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இது எல்பிடபிள்யூ முறையில் அவரது 150வது விக்கெட்டாகும். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் எல்பிடபிள்யூ முறையில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். முன்னதாக, இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார். அவர் எல்பிடபிள்யூ முறையில் மொத்தம் 166 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கட்டில் மட்டும் எடுத்துக் கொண்டால், அஸ்வின் ஏற்கனவே முரளிதரனின் (110) சாதனையை முறியடித்துவிட்டார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.