Page Loader
ரஞ்சி டிராபி 2022-23 இறுதிப்போட்டி : 174 ரன்களுக்கு சுருண்ட பெங்கால்!
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு சுருண்ட பெங்கால்

ரஞ்சி டிராபி 2022-23 இறுதிப்போட்டி : 174 ரன்களுக்கு சுருண்ட பெங்கால்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 2022-23 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் முதல் நாளில் இன்று சவுராஷ்டிரா பெங்காலை ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா பந்துவீச முடிவு செய்த நிலையில், முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 54.1 ஓவரில் 174 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் ஷாபாஸ் அகமது மட்டும் அதிகபட்சமாக 69 ரன்களும், அபிஷேக் போரல் 50 ரன்களும் எடுத்தனர். சவுராஷ்டிரா அணிக்காக ஜெய்தேவ் உனட்கட் மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பிசிசிஐ ட்வீட்