"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலான "தி 360 ஷோ" இல் நடந்த உரையாடலின் போது, கோலி மற்றும் டி வில்லியர்ஸ், ஆர்சிபியில் 11 சீசன்களில் ஒன்றாக விளையாடி, ஆடுகளத்திற்கு உள்ளேயும், ஆடுகளத்திற்கு வெளியேயும் விளையாடிய அனுபவத்தைப் பற்றிப் பேசினர். அப்போது விளையாட்டு மற்றும் பல விஷயங்களில் சில பிடித்த தருணங்களை நினைவு கூர்ந்தனர்.
தோனியை பாராட்டிய கோலி
ரன் எடுக்க ஓடுவதில் மிக மோசமான வீரர் புஜாரா என கோலி கூறினார். புஜாரா வேகமாக ஓடுவதில் வல்லவர் என்றாலும், ரன் எடுப்பதில் அவசரம் காட்டுவார் என்றும், இது எதிர்முனையில் இருக்கும் வீரர்களுடன் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்று கூறினார். குறிப்பாக 2018 செஞ்சுரியன் டெஸ்டில் அவர் புஜாரா அவசரமாக ரன் எடுக்க முற்பட்டு 2 முறையும் ரன் அவுட் ஆனதை குறிப்பிட்டார். ரன் எடுப்பதில் சிறப்பான வீரராக எம்.எஸ்.தோனியின் பெயரை கோலி கூறினார். தோனியுடன் விளையாடும்போது ரன் எடுக்க ஓடுவதில் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும் என்று பாராட்டினார். இதற்கிடையே டி வில்லியர்ஸ் ரன் எடுக்க ஓடுவதில் மிக மோசமான வீரராக பாப் டு பிளஸ்ஸிஸையும், சிறப்பான வீரராக கோலியையும் குறிப்பிட்டார்.