
பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்!
செய்தி முன்னோட்டம்
பிரசித் கிருஷ்ணா வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிருஷ்ணா, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதையடுத்து அவர் நீண்ட காலம் ஓய்வெடுக்க வேண்டிய சூழலில் இருப்பதால் வரவிருக்கும் ஐபிஎல் 2023இல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் கிருஷ்ணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.10 கோடிக்கு வாங்கியிருந்தது.
ஐபிஎல் 2022 இல் 17 ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார், ராயல்ஸ் 2008 இல் தொடக்க சீசனுக்குப் பிறகு முதல் முறையாக இந்த தொடரில் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிரசித் கிருஷ்ணா ட்வீட்
Gutted to be missing out on so much cricket. Be back soon! ⏱️🏃 pic.twitter.com/jemAfvcTbC
— Prasidh Krishna (@prasidh43) February 16, 2023