Page Loader
புரோ கபடி லீக் 2023-24 : தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி அட்டவணை
தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி அட்டவணை

புரோ கபடி லீக் 2023-24 : தமிழ் தலைவாஸ் அணியின் போட்டி அட்டவணை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2023
08:32 pm

செய்தி முன்னோட்டம்

புரோ கபடி லீக் 2023-24 தொடர் டிசம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு கடந்த ஆண்டு கேப்டனாக பவன் ஷெராவத் இருந்த நிலையில், அவர் காயம் காரணமாக பாதியில் வெளியேறியபோது சாகர் ரதி கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில், நடப்பு சீசனுக்கு சாகர் ரதி அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் குலியா துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதும் நிலையில், தமிழ் தலைவாஸ் டிசம்பர் 3ஆம் தேதி தபாங் டெல்லிக்கு எதிராக விளையாட உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சாகர் ரதி கேப்டனாக நியமனம்

Tamil Thalaivas Pro Kabaddi League Schedule

முழு அட்டவணை

டிசம்பர் 3 - தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி டிசம்பர் 10 - பெங்கால் வாரியர்ஸ் vs தமிழ் தலைவாஸ் டிசம்பர் 13 - தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் டிசம்பர் 17 - யு மும்பா vs தமிழ் தலைவாஸ் டிசம்பர் 22- தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் டிசம்பர் 23 - தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் டிசம்பர் 25 - தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் டிசம்பர் 27 - தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் டிசம்பர் 31 - தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் ஜனவரி 7 - புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்

Tamil Thalaivas PKL 2023 Schedule

போட்டி அட்டவணை (தொடர்ச்சி)

ஜனவரி 10 - உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ் ஜனவரி 14 - ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் ஜனவரி 16 - பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் ஜனவரி 21 - பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் ஜனவரி 24 - தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் ஜனவரி 28 - தமிழ் தலைவாஸ் vs யு மும்பா

Tamil Thalaivas PKL 2023 Season Schedule

போட்டி அட்டவணை (தொடர்ச்சி)

ஜனவரி 31 - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் பிப்ரவரி 4 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் பிப்ரவரி 6 - தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் பிப்ரவரி 11 - தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் பிப்ரவரி 14 - தபாங் டெல்லி vs தமிழ் தலைவாஸ் பிப்ரவரி 18 - தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்