Page Loader
புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs யு மும்பா முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
குஜராத் ஜெயன்ட்ஸ் vs யு மும்பா முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

புரோ கபடி லீக் : குஜராத் ஜெயன்ட்ஸ் vs யு மும்பா முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2023
12:18 pm

செய்தி முன்னோட்டம்

புரோ கபடி லீக் 2023 இன் ஏழாவது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியா இகேஏ ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) மோதுகின்றன. குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை பொறுத்தவரை முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை 34-31 என்ற கணக்கில் வென்றது உட்பட, நடப்பு லீக் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், யு மும்பாவும் தங்கள் முதல் போட்டியில் உபி யோதாஸ் அணிக்கு எதிராக 34-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி அவர்களுக்கு இரண்டாவது போட்டியாகும்.

Gujarat Giants vs U Mumba Head to Head Stats

குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு மும்பா நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்

புரோ கபடி லீக் வரலாற்றில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் இதுவரை 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அதிகபட்சமாக 7 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், யு மும்பா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்நிலையில், நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை உறுதி செய்யும் நம்பிக்கையுடன் குஜராத் அணி உள்ளது. அதே நேரத்தில் யு மும்பா தனது நட்சத்திர வீரர்களான குமன் சிங் மற்றும் கிரிஷ் மாருதி எர்னாக் ஆகியோர் மூலம் குஜராத் அணிக்கு சரியான போட்டியை கொடுப்பதோடு, வெற்றியையும் தன்வசமாக்க முடியும் என நம்புகிறது.

Gujarat Giants vs U Mumba Expected Starting 7 Where to watch

குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு மும்பா எதிர்பார்க்கப்படும் தொடக்க 7 மற்றும் போட்டி விவரங்கள்

புரோ கபடி லீக் 10 வது சீஸனின் 7வது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் விளையாட உள்ளன. போட்டி அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியா இகேஏ ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் போட்டியை நேரலையில் காணலாம். எதிர்பார்க்கப்படும் தொடக்க 7 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- குஜராத் ஜெயன்ட்ஸ்: ஃபாஸல் அட்ராச்சலி, முகமது எஸ்மாயில் நபிபக்ஷ், ரோஹித் குலியா, அர்கம் ஷேக், சவுரவ் குலியா, ராகேஷ் மற்றும் சோம்பிர். யு மும்பா: சுரீந்தர் சிங், குமன் சிங், மகேந்தர் சிங், ரின்கு, கிரிஷ் மாருதி எர்னாக், அமீர் முகமது ஜபர்தனேஷ் மற்றும் விஸ்வநாத் வி.

ட்விட்டர் அஞ்சல்

குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு மும்பா