Page Loader
PKL Season 10 : 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 10வது சீசன் இன்று தொடக்கம்
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 10வது சீசன் இன்று தொடக்கம்

PKL Season 10 : 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 10வது சீசன் இன்று தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 02, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

வரலாற்று ரீதியாக பல ஆண்டுகளாக கபடிக்கும் இந்திய மக்களுக்கும் இடையே எப்போதும் வலுவான தொடர்பு இருந்தாலும், 2014 இல் புரோ கபடி லீக் (பிகேஎல்) தொடங்கியதில் இருந்து இந்த விளையாட்டு நாடு முழுவதும் அதிக முக்கியத்துவமும் புகழும் பெற்றுள்ளது. மஷல் ஸ்போர்ட்ஸின் நிறுவனர்கள் 30-வினாடி ரெய்டுகள், டூ-ஆர்-டை ரெய்டுகள், சூப்பர் ரெய்டுகள் மற்றும் சூப்பர் டேக்கிள்ஸ் போன்ற புதுமையான விதிகளை அமல்படுத்தியது விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் புரோ கபடி லீக்கின் 10வது சீசன் சனிக்கிழமை (டிசம்பர் 2) தொடங்க உள்ளது. இதையொட்டி அகமதாபாத்தில் உள்ள அக்ஷர் ரிவர் குரூஸில் பிரமாண்டமான முறையில் வெள்ளிக்கிழமை தொடக்க விழா ரோவர் படகில் நடைபெற்றது.

PKL Season 10 to start on December 2nd

புரோ கபடி லீக் 2023 சீசனுக்கான கோப்பை அறிமுகம்

பிகேஎல் சீசன் 9இல் வெற்றி பெற்ற அணி கேப்டன் சுனில் குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) மற்றும் சீசன் 10 தொடக்க ஆட்டத்தில் மோதும் தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டன் பவன் செஹ்ராவத் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் கேப்டன் ஃபாஸல் அட்ராச்சலி கோப்பையை அறிமுகப்படுத்தினர். 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கொரோனாவுக்கு பிறகு மீண்டும் பழைய முறைப்படி 12 நகரங்களில் கேரவன் வடிவில் நடக்க உள்ளது. சனிக்கிழமையன்று அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் நடைபெறும் பிகேஎல் சீசன் 10 இன் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. புரோ கபடி லீக்கின் 10வது சீசன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாகவும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இலவசமாகவும் ஒளிபரப்பப்படும்.