NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'தோல்வி கூட நல்லதுதான்' : வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தோல்வி கூட நல்லதுதான்' : வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி
    வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி

    'தோல்வி கூட நல்லதுதான்' : வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 14, 2023
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், தோற்றதும் நல்லதுதான் என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவை தவிர பேட்டிங்கில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை.

    மேலும் பந்துவீச்சும் மிக சொதப்பலாக இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, விரும்பிய முடிவை பெறமுடியாவிட்டாலும் இந்த தொடரில் நிறைய கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

    hardik pandya speech after india loss series

    வெற்றி, தோல்வி முக்கியமில்லை : ஹர்திக் பாண்டியா

    போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "இங்கே அல்லது அங்கே என ஒரு தொடர் நமக்கு முக்கியமில்லை. ஆனால் இலக்குக்கான அர்ப்பணிப்பு முக்கியமானது." என்று 2024 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து தெரிவித்தார்.

    2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பேசிய பாண்டியா, "சில சமயங்களில் நாம் தோல்வியடைவது நல்லது. அப்பொழுது நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

    அனைத்து இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி மற்றும் தோல்வி ஒரு பகுதியாகும். செயல்முறை மற்றும் நாங்கள் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே இதில் முக்கியமானது." என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் ஐபிஎல்
    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்

    கிரிக்கெட்

    தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள் நண்பர்கள் தினம்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் எம்எஸ் தோனி
    வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ பிசிசிஐ
    அலெக்ஸ் ஹேல்ஸ் போலி கணக்கில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! ஐசிசி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025