
இதே நாளில் அன்று : அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஷிகர் தவான்
செய்தி முன்னோட்டம்
2013 மார்ச் 18 அன்று இதே நாளில் தான் ஷிகர் தவான் இந்திய அணிக்காக முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
பஞ்சாபின் மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியாவுக்கான விளையாடும் XI அணியில் சேர்க்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார்.
அந்த நேரத்தில் 27 வயதான தவான், மொஹாலியில் 85 பந்துகளில் 104* ரன்களை அடித்து, அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும் தவானுக்கு முன், 93 பந்துகளில் சதம் அடித்த மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் ஸ்மித் தான் அறிமுகப் போட்டியில் அதிவேக டெஸ்ட் சதம் அடித்திருந்தார்.
ஷிகர் தவான்
முதல் போட்டியில் தவான் : முழு விபரம்
1969 இல் குண்டப்பா விஸ்வநாத் எடுத்த 137 ரன்களை முந்தி, அறிமுகப் போட்டியில் இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரையும் தவான் முறியடித்தார்.
மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
முரளி விஜய்யுடன் களமிறங்கிய தவான், 85 பந்துகளில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை எட்டினார். டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் 187 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.