ட்விட்டரில் ஒரு சின்ன சந்தேகம் : நேரடியாக எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வியெழுப்பிய அஸ்வின்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் கணக்கை மார்ச் 19ஆம் தேதிக்குள் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து சந்தேகம் வந்ததால், நேரடியாக எலான் மஸ்கை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 19க்குள் கணக்கை பாதுகாக்குமாறு மெசேஜ் வரும் நிலையில், அதை எப்படி செய்வது எனத் தெரியாமல் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த விஷயத்தை பொறுத்தவரை, ட்விட்டர் தனது இலவச பயனர்களுக்கு 2FA அம்சத்தை முடக்கிவிட்டு, ப்ளூ டிக் உள்ளவர்களுக்கு மட்டும் மார்ச் 20 ஆம் தேதி முதல் இந்த சேவையை வழங்க உள்ளது.
2FA தவிர, இலவச பயனர்களுக்கு உள்நுழைவை அங்கீகரிக்க ட்விட்டர் அங்கீகார செயலி மற்றும் செக்யூரிட்டி கீ ஆகிய இரண்டில் ஒன்றை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அஸ்வின் ட்வீட்
Ok !! how do I get my Twitter account secure before the 19th of March now, I keep getting pop ups but none of the links lead out to any clarity. @elonmusk happy to do the needful. Point us in the right direction pls.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 15, 2023