ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம்
ஐபிஎல் 2023க்காக அறிவிக்கப்பட்ட புதிய விதிகளில் டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் பிளேயிங் 11 வீரர்களை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும். டாஸ் முடிவின் அடிப்படையில் விளையாடும் நிலைமைக்கு ஏற்ப சிறந்த வீரர்களை அணியில் இடம் பெறச் செய்ய அணிகளுக்கு உதவும். ஏற்கனவே எஸ்ஏ 20 லீக் இதுபோன்ற விதிகளை அமல்படுத்திய நிலையில், ஐபிஎல் இந்த விதிகளை கொண்டுவரும் இரண்டாவது டி20 ஃபிரான்சைஸ் லீக் ஆனது. மேலும் இம்பாக்ட் பிளேயர் விதியையும் இந்த ஐபிஎல்லில் கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி போட்டி தொடங்கும்போது 11 வீரர்கள் பட்டியலுடன் கூடுதலாக 5 வீரர்கள் பட்டியலையும் அணியின் கேப்டன் வழங்க வேண்டும்.
ஐபிஎல்லில் இடம் பெறும் இதர மாற்றங்கள்
ஒதுக்கப்பட்ட நேரத்தில் முடிக்கப்படாத ஒவ்வொரு ஓவருக்கும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே உள்ள நான்கு பீல்டர்களுக்கு மட்டும் அதிக அபராதம் விதிக்கப்படும். விக்கெட் கீப்பர் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டால் ஒரு ப்ரீ பால் மற்றும் ஐந்து பெனால்டி ரன்கள் எதிரணிக்கு வழங்கப்படும். அதேபோல் பீல்டரும் நியாயமற்ற முறையில் செயல்பட்டாலும் ஒரு ப்ரீ பால் மற்றும் ஐந்து பெனால்டி ரன்கள் எதிரணிக்கு வழங்கப்படும். மேலும் மைதானத்தில் அகல பந்து மற்றும் நோ பால் என அம்பயர் அறிவித்தால், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.