டாப்ஸ் திட்டத்தின் கீழ் நீரஜ் சோப்ராவுக்கு துருக்கியில் பயிற்சி : மத்திய அரசு ஒப்புதல்
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல், மார்ச் 16 அன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நீரஜ் சோப்ரா துருக்கியின் குளோரியா ஸ்போர்ட்ஸ் அரங்கில் 61 நாட்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) நிதியுதவியின் கீழ், கடந்த ஆண்டும் குளோரியா ஸ்போர்ட்ஸ் அரங்கில் பயிற்சி பெற்ற நீரஜ், ஏப்ரல் 1ஆம் தேதி துருக்கிக்குச் சென்று மே 31ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார்.
டாப்ஸ் திட்டத்தின் கீழ் அரசால் ஏற்கப்படும் செலவுகள்
டாப்ஸ் நிதியுதவியானது நீரஜ், அவரது பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸ் மற்றும் அவரது பிசியோதெரபிஸ்ட்டின் விமானக் கட்டணம், போர்டிங் & லாட்ஜிங், மருத்துவக் காப்பீடு மற்றும் உள்ளூர் போக்குவரத்துச் செலவுகளை உள்ளடக்கியது ஆகும். மிஷன் ஒலிம்பிக் செல் கூட்டத்தின்போது, கோல்ஃப் செட் உபகரணங்களை வாங்குவதற்கு நிதி உதவி மற்றும் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற திக்ஷா தாகருக்கு தனிப்பட்ட பயிற்சியாளர், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து பயிற்சியாளர் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத்துக்கு நிதி உதவி சுவிஸ் ஓபன், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் & ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் மற்றும் சங்கர் முத்துசாமி ஆர்லன் போலந்து ஓபன் மற்றும் ஸ்லோவேனியா யோனெக்ஸ் ஓபன் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான நிதியுதவிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.