Page Loader
மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!
மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற சாதனை படைத்த முனீபா அலி

மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2023
01:50 pm

செய்தி முன்னோட்டம்

முனீபா அலி புதன்கிழமை (பிப்ரவரி 15) மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். நடந்துகொண்டிருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023இல் அயர்லாந்திற்கு எதிரான தனது அணி மோதலின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். தொடக்க வீராங்கனையான விக்கெட் கீப்பர் முனீபா அலி வெறும் 68 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 102 ரன்கள் எடுத்தார். அவரது அபார ஆட்டத்தால் தான் பாகிஸ்தான் அயர்லாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதற்கு முன்பாக மே 2019 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நிடா டார் எடுத்த 75 ரன்களே பாகிஸ்தான் வீராங்கனை ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முனீபா அலி

மகளிர் டி20 உலகக்கோப்பையில் சதமடித்த வீராங்கனைகள்

முனீபா அலி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை பெற்றதோடு, உலக அளவில் இந்த சாதனையை செய்த 33 வது வீராங்கனை ஆனார். மேலும் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக சதமடித்த மூன்றாவது வீராங்கனை என்ற சிறப்பையும் முனீபா பெற்றுள்ளார். மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்களில் சதம் அடித்த ஆறாவது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார். மகளிர் டி20 உலகக் கோப்பையில் இதற்கு முன்பாக மெக் லானிங் (126) டீன்ட்ரா டாட்டின் (112*), ஹீதர் நைட் (108*), ஹர்மன்பிரீத் கவுர் (103) மற்றும் லிசெல் லீ (101) ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர்.