Page Loader
ஐபிஎல் 2025: ஒரு பேட்டர் அடித்த மிக மெதுவான பவுண்டரி இதுதான்; மோசமான சாதனை படைத்த எம்எஸ் தோனி
எம்எஸ் தோனியின் மோசமான சாதனை

ஐபிஎல் 2025: ஒரு பேட்டர் அடித்த மிக மெதுவான பவுண்டரி இதுதான்; மோசமான சாதனை படைத்த எம்எஸ் தோனி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 06, 2025
07:51 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சனிக்கிழமை (ஏப்ரல் 5) ஐபிஎல் 2025 இல் மற்றொரு ஏமாற்றமளிக்கும் தோல்வியை சந்தித்தது. இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோற்ற நிலையில், நடப்பு சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது. எம்எஸ் தோனி இந்த போட்டியில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும், சிஎஸ்கே அணி மந்தமாக ஆடியதால், இலக்கை துரத்தத் தவறி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் எம்எஸ் தோனியின் இன்னிங்ஸ் வேகம் குறைவாக இருந்தது. மேலும், அவரது முதல் பவுண்டரி 19வது பந்தில் மட்டுமே வந்தது. இது இந்த சீசனில் எந்த பேட்டருக்கும், மிக மெதுவான முதல் பவுண்டரி ஆகும்.

ஓய்வு

ஓய்வு சர்ச்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருபுறம் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில், எம்எஸ் தோனியின் பேட்டிங் செயல்திறன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இதனால் ஓய்வு பெறுவது குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ள நிலையில், ஒரு போட்காஸ்டில் பேசிய எம்எஸ் தோனி, இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டமில்லை என தெரிவித்துள்ளார். அடுத்த சீசனுக்கு முன்னர் உடல்தகுதியைப் பொறுத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதற்கிடையே, சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசியதோடு, தோனியின் ஓய்வு குறித்தும் பேசியுள்ளார். தோனியின் ஓய்வு சர்ச்சையை நிராகரித்த அவர், தோனி வலுவாக இருக்கிறார் என்றும், அவரிடம் ஓய்வு குறித்து கேட்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.