அடுத்த செய்திக் கட்டுரை

ரசிகரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி
எழுதியவர்
Sekar Chinnappan
Dec 09, 2023
06:30 pm
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
மேலும் ரசிகர்களிடையே அவரது புகழை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. அவரது ஓய்வுக்குப் பிறகும், அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்.
தோனியும் பொதுவாக ரசிகர்கள் அனைவரையும் மதிப்பளித்து சந்தித்து அன்புடன் நடந்து கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது ரசிகர் ஒருவர், தோனி தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாக இன்ஸ்டாகிராமில் "பூமியில் உள்ள அதிர்ஷ்டசாலி மனிதன்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தோனி மற்ற விருந்தினர்களுடன், ரசிகரின் கைகளில் இருந்து கேக் சாப்பிடுவதைக் காணலாம். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.