ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மைல்கல்லை கடந்தார் மிட்செல் மார்ஷ்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார். 31 வயதான அவர் புதன்கிழமை (மார்ச் 22) சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். மார்ஷ் இன்னிங்ஸைத் தொடங்கும் போது 47 ரன்களில் ஆட்டமிழந்து ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அவர் தொடக்கம் முதலே டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து முதல் பவர்பிளேயில் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை கூட்டாக எடுத்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அவரை வெளியேற்றினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் மார்ஷ் புள்ளி விபரம்
புதன்கிழமை தனது 72வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய மார்ஷ் தற்போது 34.62 சராசரியுடன் 2,008 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 15 அரை சதங்களும் அடங்கும், அவரது சிறந்த ஒருநாள் ஸ்கோர் 102* ஆகும். தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் 81, 66* மற்றும் 47 ரன்களை எடுதித்ஹார். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மார்ஷ் 89.50 சராசரியை தக்கவைத்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 358 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஏழு போட்டிகளில் அவர் விளையாடியுள்ள நிலையில், தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை இந்தியாவுக்கு எதிராக தான் எடுத்துளளார்.