Page Loader
மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி
மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

எழுதியவர் Sekar Chinnappan
May 08, 2023
07:34 pm

செய்தி முன்னோட்டம்

லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மெஸ்ஸி கடந்த திங்கட்கிழமை (மே 1) சவூதி அரேபியாவிற்கு அணி நிர்வாகத்தின் அனுமதி இன்றி வர்த்தக ரீதியான பயணம் செய்ததால் பிஎஸ்ஜி அவரை இரண்டு வாரம் இடை நீக்கம் செய்தது. இந்நிலையில், லியோனல் மெஸ்ஸி அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியதை அடுத்து அவரது இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு முன்னதாகவே அணியில் மீண்டும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இதை உறுதி செய்யும் விதமாக திங்கட்கிழமை (மே 8) அணி வீரர்களுடன் மெஸ்ஸி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிஎஸ்ஜி நிர்வாக தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post