
INDvsBAN முதல் டி20 : டி20 கிரிக்கெட் அறிமுகத்தில் வரலாற்று சாதனை படைத்தார் மயங்க் யாதவ்
செய்தி முன்னோட்டம்
குவாலியரில் நடந்துவரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தனது சர்வதேச அறிமுகத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி 11 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐயின் எக்ஸ் பதிவு
That's some start to Mayank Yadav's international career ⚡️⚡️
— BCCI (@BCCI) October 6, 2024
He starts off with a maiden 🔥
Live - https://t.co/Q8cyP5jXLe#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/XyqJxarYxO