லியோனல் மெஸ்ஸி அபாரம்! ஐரோப்பிய லீக்கில் யாரும் எட்டாத சாதனை!
பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை (மே 21) இந்த சீசனில் தனது 20வது கோலையும், 20வது அசிஸ்டையும் பதிவு செய்தார். இதன் மூலம் ஐரோப்பாவின் டாப் ஐந்து லீக்குகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரெஞ்சு லீக் 1 இல் அக்சர்ரே அணிக்கு எதிரான போட்டியின்போது அவர் இந்த சாதனையை செய்தார். இந்த போட்டியில் பிஎஸ்ஜி என 2-1 வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு லீக் 1 இல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையே மெஸ்ஸி தனது கிளப் வாழ்க்கையில் மொத்தம் 300 கோல் அசிஸ்ட்களையும் இந்த போட்டியில் பதிவு செய்துள்ளார்.