75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர்
75 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜிரோனாவின் வாலண்டின் காஸ்டெல்லானோஸ் பெற்றுள்ளார். கடைசியாக 1947 டிசம்பரில் லா லிகா விளையாட்டில் ரியல் அணிக்கு எதிராக ஒருவர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்தார். இதற்கிடையே, இந்த நான்கு கோல்கள் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக 4-2 என்ற கணக்கில் அசத்தலான வெற்றியைப் பெற்றனர். வாலண்டின் காஸ்டெல்லானோஸ், "உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான மாட்ரிட் அணிக்கு எதிராக கோல் அடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது. ஆனால் நான்கு முறை கோல் அடிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.