Page Loader
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம்
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம்

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கைலியன் எம்பாப்பே பிரான்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏஎப்பி'யின் கூற்றுப்படி, பிரான்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் இது குறித்த தகவலை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது. பிரான்ஸ் கால்பந்து அணி நிர்வாகத்திடம் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்பாப்பே தனது நாட்டிற்காக 66 போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னதாக, 36 வயதான ஹ்யூகோ லோரிஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கைலியன் எம்பாப்பே கேப்டனாக நியமனம்