Page Loader
யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?
அபிமன்யு ஈஸ்வரன்

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 16, 2022
02:30 pm

செய்தி முன்னோட்டம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன். அபிமன்யு, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில், பெங்கால் அணிக்காக விளையாடும் வீரர். மேலும் இந்தியா அணியின் தேர்வு பட்டியலில், ஓரிரு தொடர்களில் காத்திருப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டர். ஜனவரி 2021 இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடருக்கான ஐந்து காத்திருப்பு வீரர்களில் ஒருவராக அபிமன்யு இருந்துள்ளார். 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில், நான்கு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக அபிமன்யுவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டேராடூனில் பிறந்து வளர்ந்த, 27 வயதான அபிமன்யு ஈஸ்வரன் ஒரு டாப்-ஆர்டர் பேட்டர்.

ட்விட்டர் அஞ்சல்

பிசிசிஐ அப்டேட்

மேலும் படிக்க

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

அவர் அவ்வப்போது லெக் பிரேக்குகளையும் வீசுகிறார். 2013 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்திற்கு எதிராக பெங்கால் அணிக்காக ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். பின்னர், இந்தியா ஏ அணியிலும், உள்நாட்டு டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். பெங்கால் அணியின் கேப்டனாக, அதிகபட்சமாக 233 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 76 இன்னிங்ஸ்களில் விளையாடி 3376 ரன்களை எடுத்துள்ளார். எனினும், தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு களமிறங்க வாய்ப்புகள் குறைவு என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. K.L. ராகுல் மற்றும் ஷுப்மான் கில் இறக்கப்படலாம் எனவும் தெரிவிக்கின்றன. இதுவரை அபிமன்யு ஈஸ்வரன், 134 முதல் தர இன்னிங்ஸ்களில் விளையாடி, 5576 ரன்களை குவித்துளார். 45.33 சராசரியுடன் 233 ரன்களுடன் பெற்றுள்ளார். மேலும் 15 சதங்கள் மற்றும் 20 அரை சதங்கள் அடித்துள்ளார்.