டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவை அவர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர்
2003 ஆம் ஆண்டு முதல் 187 டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார். எனவே, மொத்தமாக 708 விக்கெட்டுகளை எடுத்த ஷேன் வார்னேவின் சாதனை முறியடிக்க ஆண்டர்சனுக்கு 9 விக்கெட்டுகள் தேவையாகும். ஆனால், அவர் அதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். கடந்த மார்ச் மாதத்தில், தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் குல்தீப் யாதவை அவுட்டாக்கியபோது, டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்தார் ஆண்டர்சன்.