Loading...
INDvsNZ: இஷான் கிஷனுக்கு காயம்; 2வது டி20 போட்டியில் வைபவ் சூரியவன்ஷி களம் இறங்குகிறாரா?
2வது டி20 போட்டியில் இருந்து இஷான் கிஷன் காயத்தால் நீக்கம்

INDvsNZ: இஷான் கிஷனுக்கு காயம்; 2வது டி20 போட்டியில் வைபவ் சூரியவன்ஷி களம் இறங்குகிறாரா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2026
10:40 am

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் தொடை பகுதியில் காயம் அடைந்துள்ளார். இதனை டி20 கிரிக்கெட்இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, சனிக்கிழமை கிரைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், இஷான் கிஷனிற்கு பதில் வைபவ் சூரியவன்ஷி விளையாடும் லெவனில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வைபவ் சூரியவன்ஷி

வைபவ் சூரியவன்ஷிக்கு கதவு திறக்கிறதா?

முதலாவது போட்டியில் இஷான் கிஷன் காயமடைந்ததால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அவர் முழுமையாகக் குணமடையாவிட்டால் அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

வைபவ் சூரியவன்ஷி அணியில் இணைய பலமான போட்டியாளராக உள்ளார் என பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அல்லது நடுவரிசையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ADVERTISEMENT

சாதனைகள்

வைபவ் சூரியவன்ஷியின் சர்வதேச மற்றும் ஐபிஎல் சாதனைகள்

இளம் இடதுகை பேட்டரான வைபவ் சூரியவன்ஷி இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 186.36 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 246 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். மேலும் ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்து அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணியின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த இவருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்கப் பிரகாசமான சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியா வெற்றி

முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி

முதலாவது போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் எட்டி சாதனை படைத்தது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் இதுவாகும்.

சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும், நமன் தீர் 15 பந்துகளில் 42* ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT