NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்
    ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஸ்டீவ் ஸ்மித்

    ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    07:58 pm

    செய்தி முன்னோட்டம்

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    கடைசியாக 2021 ஐபிஎல் சீசனில் இடம்பெற்ற ஸ்டீவ் ஸ்மித், தனது அடிப்படை விலையை ₹2 கோடியாக நிர்ணயித்திருந்தார்.

    குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டீவ் ஸ்மித் பணம் நிறைந்த ஐபிஎல் லீக்கில் ஐந்து அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    திங்களன்று (நவம்பர் 25) விரைவுபடுத்தப்பட்ட சுற்றில் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    குறிப்பிட்டுள்ளபடி, ஸ்மித் கடைசியாக 2021 இல் போட்டியில் விளையாடினார். அங்கு அவர் டெல்லி கேபிடல்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

    இருப்பினும், அவர் 112.59 என்ற மோசமான ஸ்ட்ரைக்ரேட்டில் எட்டு போட்டிகளில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    தகவல்

    ஐபிஎல்லில் ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரம்

    குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டீவ் ஸ்மித் தனது ஐபிஎல் பயணத்தை 2012 இல் தற்போது செயல்படாத புனே வாரியர்ஸ் இந்தியா அணியுடன் தொடங்கினார்.

    அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியை 2017 இல் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கேப்டனாக வழிநடத்தினார்.

    எனினும், அங்கு அவர்கள் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி அடைந்தனர்.

    ஒரு தசாப்த கால வாழ்க்கையில், ஸ்டீவ் ஸ்மித் 103 ஐபிஎல் போட்டிகளில் 34.51 சராசரியில் 2,485 ரன்கள் எடுத்துள்ளார்.

    லீக்கில் அவரது ஸ்ட்ரைக்-ரேட் 130க்குக் கீழே குறைகிறது. அவரது எண்ணிக்கையில் ஒரு சதமும் அடங்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டீவ் ஸ்மித்

    Steve Smith remains UNSOLD!#TATAIPLAuction | #TATAIPL

    — IndianPremierLeague (@IPL) November 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டீவ் ஸ்மித்
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஸ்டீவ் ஸ்மித்

    ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? ஐபிஎல்

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி எம்எஸ் தோனி
    நம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே! எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்; மீண்டும் மஹேல ஜெயவர்த்தனே நியமனம் மும்பை இந்தியன்ஸ்

    கிரிக்கெட்

    ஐபிஎல்லில் முதல்முறையாக நுழையும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    2024இல் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள்; புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணி சாதனை இந்திய கிரிக்கெட் அணி
    2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா? டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025