ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி
ஐபிஎல்லில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வீரர்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் முழுக்க கொரோனாவின் தீவிரம் குறைந்துவிட்டாலும், கொரோனா குறித்த தனது கொள்கையில், பிசிசிஐ தீவிரமாக உள்ளது. தனிமைப்படுத்தல் கொள்கையில் உறுதியாக இருந்தாலும், பயோ-பபுள்கள் இந்த முறை இருக்காது. அதற்கு பதிலாக, ஐபிஎல் கவனமாக இருக்க விரும்புவதாகவும், கொரோனா பாதிர்ப்பிற்கு உள்ளானவர்களை மட்டும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது. இதன்படி, கொரோனா எதிர்மறை சோதனை வந்தபிறகு ஐந்தாவது நாளில் மீண்டும் அணியில் இணைந்து கொள்ளலாம்.
ஐசிசியின் கொரோனா கட்டுப்பாடு
சர்வதேச கிரிக்கெட் உட்பட, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் ஐசிசியால் மெதுவாக தளர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் தஹ்லியா மெக்ராத் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தாலும் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் கேம்ஸ் 2022 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பங்கேற்றார். அதில் அவரது அணி வெற்றி பெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2022 இன் போது, வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்டர் மேத்யூ வேட், இங்கிலாந்துக்கு எதிரான தனது அணியின் போட்டியில் பங்கேற்றார்.