INDvsENG 2வது டி20: திலக் வர்மாவின் அதிரடியால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி
செய்தி முன்னோட்டம்
திலக் வர்மாவின் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், சென்னையில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2-0 என முன்னிலை பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 45 ரன்களும், பிரைடன் கார்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி
இந்திய அணியின் சிறப்பான செயல்திறன்
இந்திய தரப்பில் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றியது.
எனினும், அதன் பின்னர் வந்த திலக் வர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 72 ரன்கள் குவித்து, 20வது ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணிக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது.