Page Loader
ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு
ஏப்ரல் 25 முதல் இந்திய மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம்

ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கால்பந்து லீக்கின் அடுத்த சீசன் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று (மார்ச் 27) அதன் லீக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்தது. திங்களன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் தலைவர் லால்ங்கிங்லோவா ஹ்மார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, மூன்று வெளிநாட்டு வீராங்கனைகளை ஒரு அணியில் அதிகபட்சமாக சேர்த்துக் கொள்ளவும், களத்தில் ஒரே நேரத்தில் இரு வீராங்கனைகள் விளையாடவும் அணிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் நிலையில், தலா 8 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஐஏஎன்எஸ் ட்வீட்