Loading...
பெங்களூரில் ஆட்டம் காட்டிய மழை! இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் சமனில் முடிந்தது
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் சமனில் முடிந்தது

பெங்களூரில் ஆட்டம் காட்டிய மழை! இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் சமனில் முடிந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
08:38 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் அக்டோபர் 17 அன்று நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டதாக நடுவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாகப் போட்டியின் டாஸ் போடுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை குறைந்ததை அடுத்து ஆட்டம் தொடங்கப்பட்டது.

ஓவர்கள் குறைப்பு

9 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டமும் இந்திய அணியின் அதிரடியும்

போட்டி தாமதமானதால் இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைத்து நடத்த நடுவர்கள் முடிவு செய்தனர்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

மீண்டும் மழை

7.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை

இஷான் கிஷனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும் நமன் தீர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி 7.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து நீடித்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் வெற்றிக் கோப்பை கூட்டாகப் பகிர்ந்து அளிக்கப்படும் நிலை உருவானது.

ADVERTISEMENT

கேப்டன் பேட்டி

போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

தொடர் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாடினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மட்டையாளர்கள் தொடர் முழுவதும் மிக சிறப்பாக பேட்டிங் செய்ததாகப் பாரட்டினார்.

குறிப்பாக ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியிருந்தால் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும் எனக் கூறினார்.

இருப்பினும் தங்கள் அணியின் அதிரடி ஆட்டமுறை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT