இந்தியா - நியூசிலாந்து மோதல்: அட்டவணை, போட்டிகள் நேரம் மற்றும் நேரலை விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 12 போட்டிகளில் களம் காண்கிறது. இந்த நீண்ட தொடரின் முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடருக்கான முழு அட்டவணை, போட்டி தொடங்கும் நேரங்கள் மற்றும் நேரலை ஒளிபரப்புத் தகவல்கள் குறித்த முழுமையான பார்வை இதோ.
அட்டவணை
டி20 மற்றும் ஒருநாள் தொடர் அட்டவணை
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் அக்டோபர் 22-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
தொடர்ந்து அக்டோபர் 24, 27, 30 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் எஞ்சிய 4 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி நண்பகல் 12:30 மணிக்குத் தொடங்கும்.
இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7, 10, 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த 5 ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு ஆரம்பமாகும்.
சவால்
டெஸ்ட் தொடர் அட்டவணை
இத்தொடரின் உச்சகட்டமாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்குட்பட்ட 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அரங்கேறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 19 முதல் 23 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகள் இரண்டும் இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்கே தொடங்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணி இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதில் சறுக்கினால் அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகும் என்பதால், கேப்டன் கில்லுக்கு இந்த தொடர் முக்கியமான அக்னிப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது.
நேரலை
நேரலை ஒளிபரப்பு விவரங்கள்
இந்தியாவில் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண முடியும்.
சோனி டென் 1, சோனி டென் 3 மற்றும் சோனி டென் 5 ஆகிய அலைவரிசைகளிலும், தமிழ வர்ணனையுடன் சோனி டென் 4 சேனலிலும் கண்டு ரசிக்கலாம்.
அதேபோல், ஆன்லைனில் போட்டிகளை நேரலையாகப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் SonyLIV செயலி மற்றும் இணையதளத்தின் வாயிலாகப் போட்டிகளைப் பார்த்து ரசிக்கலாம்.