Page Loader
இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 03, 2023
06:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடக்க உள்ள நிலையில், இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே, பெங்களூரில் நடந்த தொடரின் 5வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ளும்போது, இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டி20 ரன் குவிப்பில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

IND vs AUS T20I : Yashasvi Jaiswal in the edge to beat Faf du plessis record

2023ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்த தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் 3வது இடத்தில் இருக்கும் ஜெய்ஸ்வால், 2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 1,216 ரன்களை குவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸை மிஞ்சுவதற்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இதை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், ஜோஸ் பட்லர் 1,672 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஷுப்மன் கில் 1,194 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 1,189 ரன்களும் எடுத்து முறையே நான்கு, ஐந்து, ஆறாவது இடங்களில் உள்ளனர்.