
இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்பூர் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான 4வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி புதன்கிழமை (நவ.29) மாலை சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் சென்றடைந்தது.
டிசம்பர் 1 ஆம் தேதி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும்.
ராய்ப்பூர் ஸ்டேடியம் இதற்கு முன்பு டி20 சர்வதேச போட்டியை நடத்தியதில்லை.
இதனால் மைதானம் எந்த வகையில் இருக்கும் என்பது தெரியாததால், போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புதன்கிழமை ராய்பூர் சென்றடைந்த வீரர்களை விமான நிலையத்தில் வரவேற்கும் வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Guwahati ✈️ Raipur#TeamIndia are here for the 4️⃣th #INDvAUS T20I 👌🏻👌🏻@IDFCFIRSTBank pic.twitter.com/kotB4o8vll
— BCCI (@BCCI) November 29, 2023